பாஜகவினரை தாக்க முயன்ற திமுகவினர்-கொடிகளை பறித்து தீ வைத்தனர்
கருர்:
திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி கருர் தாலுகா அலுவலகம் முன் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் முன்பே பாஜக கொடிகளுக்கு திமுக தொண்டர்கள் தீ வைத்தனர்.
திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி கருர் தாலுக்கா அலுவலகம் முன்பு பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபற்றது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவமணி தலைமை வகித்தார். பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரைக் கண்டித்தும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி கருர் தாலுக்கா அலுவலகம் முன்பு பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திமுக நிர்வாகிகள் பாலகுரு, ஜெயபால், பிரபு, காலனி செந்தில் ஆகியோர் தலைமையில் திரண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அங்கு வந்து பாஜகவினரை தாக்க முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்தனர். இருப்பினும் திமிறிக் கொண்டு சென்ற திமுவினர் பாஜகவினரிடம் இருந்து கொடிகளை பறித்து போலீசார் முன்பே தீ வைத்து கொளுத்தினர்.
இதையடுத்து திமுகவினர் பாஜகவினர் தாக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் மோதல் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications