கடன் கேட்டவர் பெயரில் ரூ.1 லட்சம் மோசடி!
உடன்குடி:
சுயதொழில் தொடங்க வங்கி கடனுக்கு விண்ணப்பித்த வாலிபர் பெயரில் ரூ.1 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை அடுத்த மேலராமசாமியாபுரத்தை சேர்ந்த பால்பாண்டி மகன் ஜாண்சன் சுரேஷ். இவர் கடந்த 2004ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் ஜெராக்ஸ் மெஷின் வாங்குவதற்காக வங்கி கடன் கேட்டுள்ளார்.
மாவட்ட தொழில் மையத்தின் அனுமதியுடன் திருச்செந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கிக்கு மனு செய்துள்ளார். வங்கி அதிகாரிகள் மதிப்பீட்டு பட்டியல் (கொட்டேசன்) வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில் ஜான்சன் சுரேஷ் லெட்சுமிபுரத்தை சேர்ந்த வீரசிங் என்பவரை அணுகியுள்ளார். இவர் திருநெல்வேலியில் பிரண்ட்ஸ் கிராபிக்ஸ் நடத்தி வரும் செல்வம் என்பவரிடம் 99 ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பீட்டுப் பட்டியல் பெற்று கொடுத்துள்ளார்.
ஆனால் மாதங்கள் சில ஆகியும் ஜான்சன் சுரேஷ்க்கு வங்கி கடன் கிடைக்கவில்லை. இதனால் ஜான்சன் சுரேஷ் வங்கியில் கடன் பெறும் தனது திட்டத்தை கைவிட்டு விட்டார். இந்நிலையில் தனது பெயரில் வங்கியில் 99 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜான்சன் சுரேஷ்க்கு தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஜான்சன் சுரேஷ் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் தன்னை திருசெந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர், மேற்பார்வையாளர், லெட்சுமிபுரம் வீரசிங், திருநெல்வேலி ஜங்சன் பிரண்ட்ஸ் கிராபிக்ஸை சேர்ந்த செல்வம் ஆகியோர் வங்கி கடன் பெற்று தருவதாக கூறி எனது பெயரில் கொட்டேசன் கொடுத்து செல்வத்திறகு 99 ஆயிரத்துக்கு செக் (காசோலை) கொடுத்து என்னை மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
சாத்தான்குளம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மெஞ்ஞானபுரம் இன்ஸ்பெக்டர் கருணாநிதி திருச்செந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் செயலாளர், மேற்பார்வையாளர், லெட்சுமிபுரம் வீரசிங், திருநெல்வேலி ஜங்சன் பிரண்ட்ஸ் கிராபிக்ஸை சேர்ந்த செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications