தேமுதிகவினரை மருத்துவமனைக்குள் புகுந்து அடித்த விடுதலைச் சிறுத்தைகள்!
கடலூர்:
கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தொண்டர்களை, மருத்துவமனைக்குள் புகுந்து விடுதலைச் சிறுத்தைள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெறித்தனமாக தாக்கியதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அருகே உள்ள பெரியகங்கணாபுரத்தில், பேனர் கட்டுவது தொடர்பாக தேமுதிக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கிடையே மோதல் எழுந்தது.
இதில், தேமுதிகவைச் சேர்ந்த சண்முகம், குமரன், ஜெயசீலன், லெனின் ஆகியோரும், பதில் தாக்குதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித், சிவபாலன் ஆகியோரும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்தனர்.
அங்கிருந்த, ஊனமுற்றவர்கள் பயன்படுத்தும் இரும்பு நாற்காலியைத் தூக்கி தேமுதிகவினரை சரமாரியாகத் தாக்கினர். வெறி கொண்டு அவர்கள் தாக்கியதில், ஏற்கனவே காயமடைந்திருந்த நான்கு தேமுதிகவினரும் மேலும் படுகாயமடைந்தனர்.
இந்த திடீர் தாக்குதலால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து ஓடி விட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications