கருணாநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்-ராஜ்நாத் சிங்
சென்னை:
ராமர் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்காக முதல்வர் கருணாநிதி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி அவர் செய்யத் தவறினால் திமுக அமைச்சர்களை மத்திய அமைச்சரவையிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் இன்று சென்னைக்கு வந்தார். திமுகவினரால் தாக்கப்பட்ட தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களை முதல்வர் கருணாநிதி திரும்பப் பெற வேண்டும். நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதைச் செய்யுமாறு கருணாநிதியை, சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் வலியுறுத்த வேண்டும்.
கருணாநிதி அதைச் செய்யத் தவறினால், மத்திய அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர்களை பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும்.
திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் அறிவித்துள்ள கடையடைப்புப் போராட்டத்தால் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் அலுவலங்கள், நிர்வாகிகளின் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.
பின்னர் மறைந்த முன்னாள் பாஜக தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தச் சென்றார்.
ஜனா. கிருஷ்ணமூர்த்தி உடல் தகனம்:
இந் நிலையில் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பொதுச் செயலாளர் அனந்த்குமார், ஆந்திர மாநில பாஜக தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா, முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு, மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications