மேலும் பல பெரிய பதவிகள் வரும்-ராகுலுக்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை:
மேலும் பல பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும் என்று காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் கருணாநிதி பேக்ஸ் மூலம் வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு எனது இதயப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களை கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்திருப்பது, இளைய தலைமுறைகளுக்கு பொறுப்புகளை வழங்குவதில் காங்கிரஸ் கட்சி எப்போதும் தயாராக இருப்பதையே காட்டுகிறது.
இந்தியாவைப் பண்படுத்துவதிலும், சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டியதிலும் உங்களது குடும்பம் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த வரலாற்றுப் பின்னணி உங்களை அசைக்க முடியாதபடி நிலை நிறுத்தும்.
நீங்கள் இன்னும் அதிகமாக உழைப்பதற்கு, மேலும் பல பெரிய பதவிகள் வந்தடையும் என்று வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார் கருணாநிதி.
மேலும், ராகுல் காந்திக்குப் பதவி கொடுத்ததன் மூலம் சரியான முடிவெடுத்துள்ளதாக சோனியா காந்தியைப் பாராட்டி அவருக்கும் ஒரு பாராட்டுச் செய்தி அனுப்பியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications