வேதாந்தியை கண்டித்து பாமக தொடர் போராட்டம்
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்த வேதாந்தியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப் போவதாக பாமக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டப் பணிகள் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், மத வெறியைத் தூண்டும் வகையில், முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் அறுத்து வருபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கப்படும் என்று பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மத வெறியைத் தாண்டி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை தங்கு தடையின்றி விரைவாக நிறைவேற்றி முடிக்க வேண்டி மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
இதை வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பும், தாசில்தார் அலுவலகங்கள் முன்பும் வருகிற 29 மற்றும் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
இப்போராட்டத்தில் பாமக சட்டசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட தென் மாவட்டத் தலைநகரில் ஒரு நாளும், அவரவர் சார்ந்த மாவட்டத்தில் ஒரு நாளும், அவரவர் தொகுதியில் ஒரு நாளும் என 3 நாட்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications