'செக்ஸ்': முதலிடத்தில் மெக்சிகோ; 3வது இடத்தில் இந்தியர்கள்!!!
சென்னை:
'செக்ஸ் 'வைத்துக் கொள்வதில் உலகிலேயே மெக்சிகர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். இந்தியர்களுக்கு இதில் 3வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் பார்ட்னர்களை திருப்திப்படுத்துவதில் உலக சராசரியை விட இந்தியர்களின் சராசரி அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஆணுறைகள் உள்ளிட்ட கருத் தடுப்பு சாதனங்களைத் தயாரிக்கும் பிரபல டியூரக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. செக்ஸ் வைத்துக் கொள்வதில் உலக அளவில் யார் நம்பர் ஒன், பார்ட்னர்களைத் திருப்திப்படுத்துவதில் யார் சிறந்தவர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கருத்துக் கணிப்பை இது நடத்தியது.
26 நாடுகளில் 26,000 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் உலக அளவில் செக்ஸ் வைத்துக் கொள்வதில் சிறந்தவர்களாக மெக்சிகோ நாட்டினர் உருவெடுத்துள்ளனர். 80 சதவீத மெக்சிகர்கள் செக்ஸில் திருப்தியுடன் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
2வது இடம் கிரேக்கர்களுக்குக் கிடைத்துள்ளது. இவர்களின் சராசரி அளவு 76 சதவீதமாகும். இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளனர். 74 சதவீத இந்தியர்கள் செக்ஸில் பூரண திருப்தியுடன் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனராம்.
அதேசமயம், செக்ஸில் பூரண திருப்தியுடையவர்களின் உலக சராசரி 58 சதவீதம்தான். அதை விட இந்தியர்களின் திருப்தி சராசரி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றுக்கும் மேற்பட்டோரிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதில் இந்தியர்கள் சற்று தயக்கம் காட்டுகிறார்களாம். சராசரியாக ஒரு இந்திய ஆண், அதிகபட்சம் 6 பெண்களை காதலியாக வைத்திருக்கிறாராம் (லியாகத் அலி போன்றவர்கள் இதில் விதி விலக்கானவர்கள்!!).
இதுவே இங்கிலாந்தில், ஒரு ஆணுக்கு குறைந்தது 16 காதலிகளும், பெண்ணுக்கு குறைந்தது 10 காதலர்களும் இருக்கிறார்களாம்.
உலக அளவில் ஒரு ஆண் 13 பெண்களுடனும், ஒரு பெண் 7 ஆண்களுடனும் உறவு கொள்வதாக தெரிய வந்துள்ளது.
ஒரே பார்ட்னருடன் உறவு கொள்பவர்கள், உறவில் படு திருப்தியாக ஈடுபடுகிறார்களாம். 19 சதவீதம் பேர் வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.
இந்தியாவில் 9 சதவீதம் பேர் வைப்ரேட்டர்களை பயன்படுத்துகிறார்கள். 13 சதவீதம் பேர் உபயோகித்துப் பார்க்கலாம் என நினைத்துள்ளார்களாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications