3வது அணி கூட்டம் திடீர் ரத்து
டெல்லி:
கூட்டணியில் பிளவு ஏற்படுவதை பகிரங்கப்படுத்த விரும்பாத 3வது அணித் தலைவர்கள் இன்றைய கூட்டத்தை திடீரென ரத்து செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு உருவானது 3வது அணி என அழைக்கப்படும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி. ஆனால் தேர்தல் நாளன்றே கூட்டணியில் விரிசல் விழுந்து விட்டது.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்ட ஜெயலலிதாவின் போக்கால் பெரும் அதிர்ச்சியுற்ற 3வது அணித் தலைவர்கள் இதுதொடர்பாக எந்தவித முடிவையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தனர்.
இந்த நிலையில் 3வது அணியின் முக்கியக் கூட்டம் இன்று டெல்லியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூடியிருந்தனர்.
இக்கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டாலும் சரி, பங்கேற்காவிட்டாலும் சரி என்ற மனோ நிலையில் இருந்தனர் கூட்டணி தலைவர்கள். மேலும், இக்கூட்டத்தில் உமாபாரதி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட புதிய தலைவர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஜெயலலிதாவின் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால் அவராகவே கூட்டணியில் இருந்து விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என்று கருதப்பட்டது.
இந் நிலையில், 3வது அணியின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா விவகாரத்தில், இன்னும் சில காலம் பொறுத்துப் பார்க்கலாம் என கூட்டணித் தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா வராத நிலையில் இன்றைய கூட்டம் நடந்தால், 3வது அணி உடைந்து விட்டது என்ற பெய்தி பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படும். அதைத் தவிர்க்கவே கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக 3வது அணி தரப்பில் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications