காங். பெண் எம்.பி மீது துப்பாக்கிச் சூடு
டெல்லி:
டெல்லியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கிருஷ்ணா தீரத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரும், அவரது கணவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டெல்லி, கரோல்பாக் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிருஷ்ணா தீரத். இவர் நேற்று இரவு தனது கணவருடன் காரில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். கணவர்தான் காரை ஓட்டினார்.
அப்போது திடீரென கார் முன்பு பாய்ந்த ஒரு மர்ம நபர், கார் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் காரைத் துளைத்துக் கொண்டு குண்டு பாய்ந்தது. இருப்பினும் தீரத் மற்றும் அவரது கணவருக்கு காயம் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். அவர் யார், எதற்காக சுட்டார் என்று தெரியவில்லை. தனக்கு எந்த எதிரியும் இல்லை என்று போலீஸாரிடம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
தலைநகரில், காங்கிரஸ் எம்.பியின் கார் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மந்திர மார்க் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications