கருணாநிதியை சந்தித்தார் திணேஷ் கார்த்திக் பரிசு கொடுத்து முதல்வர் பாராட்டு
சென்னை:
முதல்வர் கருணாநிதியை இந்திய கிரிக்கெட் வீரர் திணேஷ் கார்த்திக் இன்று சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு உலகக் கோப்பையை வென்றதைப் பாராட்டி ரூ. 5 லட்சம் பரிசு கொடுத்து முதல்வர் கருணாநிதி வாழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணி வீரர்களுக்குக் கோடிக்கணக்கில் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியம் தவிர, வீரர்கள் சார்ந்த மாநில அரசுகள், அவர்கள் வேலை பார்த்து நிறுவனங்கள், இந்திய அணியின் ஸ்பான்சரான சஹாரா நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பரிசுகள் கொட்டிக் குவிக்கப்பட்டுள்ளன.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள திணேஷ் கார்த்திக்குக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்திருந்தது. நேற்று சென்னை வந்த திணேஷ் கார்த்திக், இன்று கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
அவரிடம் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கிய முதல்வர் திணேஷின் சிறப்பான ஆட்டம் தொடர வாழ்த்தினார்.
நிகழ்ச்சியின்போது மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, விளையாட்டுத் துறை அமைச்சர் மைதீன் கான், மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பரிசைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்த திணேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு வழங்கியுள்ள இந்தப் பரிசு ஊக்கம் தருவதாக உள்ளது. விளையாட்டுக்குக் குறிப்பாக கிரிக்கெட்டுக்கு தமிழக அரசு தரும் ஆதரவு பாராட்டுக்குரியது.
இந்தப் பரிசின் மூலம், அடுத்த நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாட புத்துணர்வு கிடைத்துள்ளது என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications