சிக்கலாகும் கர்நாடக ஆட்சி மாற்றம்!
டெல்லி:
டெல்லி சென்ற முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, பாஜக தலைவர்களைச் சந்திக்காமேலேய திரும்பியுள்ளார். இதனால், கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் பெரும் சிக்கலைச் சந்திக்கும் எனத் தெரிகிறது.
கர்நாடகத்தில் கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம், பாஜகவின் துணையுடன் ஆட்சி அமைத்துள்ளது. கெளடாவின் மகன் குமாரசாமி முதல்வராக உள்ளார்.
இரு கட்சிகளும் ஆட்சி அமைத்தபோது செய்து கொண்ட ஒப்பந்தப்படி வருகிற அக்டோபர் 3ம் தேதி பாஜகவிடம், குமாரசாமி ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்கப் போவதில்லை என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு அரசியல் சூழ்நிலை படு சூடாக உள்ளது.
இந்த நிலையில் தேவெ கெளடா டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் பாஜக தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். அப்போது ஆட்சி மாற்றம் தொடர்பாக ஆலோசிக்கவும் தீர்மானித்திருந்தார்.
ஆனால் பாஜக தலைவர்களைச் சந்திக்காமலேயே கெளடா பெங்களூர் திரும்பி விட்டார். விரைவில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெளடாவின் திட்டம் என்ன என்பது குறித்து மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் மெளனம் காக்கின்றனர். இருப்பினும் திட்டமிட்டபடி தங்களிடம் முதல்வர் பொறுப்பை மதச்சார்பற்ற ஜனதாதளம் வழங்கும் என்ற நம்பிக்கையில் பாஜக தலைவர்கள் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications