காய்ச்சல் எதிரொலி: ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 1 வாரம் விடுமுறை!
சென்னை:
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் பரவி வருவதால் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்திலும், விடுதிகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 15 மாணவர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரீஷ்மா என்ற மாணவியின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
வட சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு சமீபத்தில் விஷக் காய்ச்சல் பரவியது. இதையடுத்து மாணவ, மாணவியர் 15 பேர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் உபி. மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கரீஷ்மாவின் உடல் நிலை மோசமாக உள்ளது. கவலைக்கிடமான நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தவிர மேலும் இரு மாணவர்களும் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாணவ, மாணவியரிடையே மட்டுமல்லாது ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரும் பீதியடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரீஷ்மா பிரதான் என்ற மாணவிக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. அவருக்கு அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படும் என்பதால் அவராகவே மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைக் காய்ச்சல் வந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் இருக்கிறார். இதேபோல துர்கேஷ், ஆஷிஷ் பானர்ஜி ஆகிய இருவரும் கூட அப்பல்லோவில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் ஆஷிஷ் பானர்ஜி டிஸ்சார்ஜ் ஆகி விட்டார். துர்கேஷும் டிஸ்சார்ஜ் ஆகவுள்ளார். அவர்களின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதின் பேரிலேயே அப்பல்லோவில் அவர்கள் சேர்க்கப்பட்டனர்.
மற்ற மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். விடுதி சுகாதாரமாக இல்லை என்று வந்த புகாரைத் தொடர்ந்து நானே நேரில் சென்று பார்த்தேன்.
மாணவர்களுக்கிடையே காய்ச்சல் பரவுவதால் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மேம்பாட்டுக்காக முதல்வர் கருணாநிதி ரூ. 100 கோடியை ஒதுக்கியுள்ளார். அதில் விடுதி மேம்பாட்டுக்கு மட்டும் ரூ. 25 கோடியை ஒதுக்கியுள்ளோம்.
மாணவர் விடுதிகள் நான்கிலும் சுகாதார நடவடிக்கைககள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையை உதாரணமாக எடுத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், விடுதிகளில் சுகாதார நடவடிக்கையை கவனமுடன் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் ராமச்சந்திரன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications