கருணாநிதிக்கு கருப்புக் கொடி - 10 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் முதல்வர் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டிய மக்கள் தமிழகம் என்ற குட்டிக் கட்சியின் பத்து தொண்டர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை, ஆதிதிராவிடர்கள் என்ற பெயரில் அழைப்பது தொடர்பான தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என மக்கள் தமிழகம் கட்சியினர் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று புதுக்கோட்டைக்கு வந்த முதல்வர் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்ட இக்கட்சியின் தொண்டர்கள் முயன்றனர். முதல்வர் வரும் பாதையில் கோஷமிட்டு திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் பத்து பேரை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications