ஊர் விட்டு ஊர் சென்று செல்போன் திருடி போலீஸில் சிக்கிய வாலிபர்
நாகர்கோவில்:
செல்போன் கடையில் திருடி..செல்போனை உபயோகித்த போது பலே திருடன் சிக்கினான்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் கோபி (24), இவர் மீது நாகர்கோவில் மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் நகைபட்டறைகளை கொள்ளையடித்தல் உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஒரு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகியுள்ளார்.
இவர் கடந்த 14ம் தேதி குற்றாலத்திலுள்ள தனது சித்தப்பா கேசவன் வீட்டுக்கு சென்றுள்ளார். அன்று இரவு பிரானுர் பார்டர் பகுதிக்கு சென்ற அவர் நிஸார் என்பவர் கடையில் சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய ரியலைன்ஸ் செல்போன்கள், வேறு செல்போன்கள் என மொத்தம் 7 செல்போன்களையும், ரீசார்ஜ் கார்டுகளையும் திருடிவிட்டு நாகர்கோவில் வந்துள்ளார்.
புதிய செல்போன்களை இங்குள்ள கடைகளில் விற்றுள்ளார். அதேபோல் ரீசார்ஜ் கார்டுகளையும் விற்றுவிட்டு ஜாலியாக செலவு செய்துள்ளார்.
செல்போன் கடை உரிமையாளர் நிஸார் செங்கோட்டை போலீசில் புகார் செய்யவே அவர்கள் விசாரணையில் இறங்கினர். அப்போது, நாகர்கோவிலை சேர்ந்த மது, மகேஷ் என்ற 2 பேர் விலைக்கு வாங்கியது தெரிய வரவே, செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் நாகர்கோவில் வந்து கோபியை கைது செய்தனர்.
மேலும் அவர் விற்பனை செய்த செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கூடுதல் விசாரணைக்காக அவரை செங்கோட்டைக்கு அழைத்து சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications