'ஆசன வாயில்' வைரம் கடத்தியவர் கைது!
சென்னை:
கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் ஆசன வாயிலிருந்து பல லட்சம் மதிப்புள்ள கடத்தல் வைரங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டாக்டர்களின் உதவியுடன் இந்த வைரங்களை அதிகாரிகள் வெளியே எடுத்தனர்.
கொழும்பிலிருந்து சென்னைக்கு நேற்று வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் முஸ்தபா ஜமால் (43) என்பவர் பயணித்தார். விமானத்திலிருந்து இறங்கிய அவர் வெறும் கைப்பையுடன் வந்தார்.
நேராக சுங்கத்துறை அதிகாரிகள் செக்கிங் செய்யாமல் அனுப்பும் வழியான கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், ஜமாலை மடக்கி நிறுத்தினர். அவரது உடல் முழுவதும் ஸ்கேன் செய்தனர்.
அப்போது அவரது ஆசன வாயில் 2 சிறிய பிளாடிக் பைகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் உதவியுடன் அந்த பிளாஸ்டிக் பைகளை வெளியே எடுத்தனர்.
அந்தப் பையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் இருப்பதை தெரிய வந்தது. இதுதவிர அவரது பையிலும் ஒரு பிளாஸ்டிக் பையில் வைரக் கற்கள் இருப்பது தெரிந்தது.
மொத்தம் அரை கிலோ எடையுள்ள 942 கற்கள் இருந்தன. வைரக் கற்கள் தவிர மரகதக் கற்களும் அதில் இருந்தன. ஜமால் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications