குடிபோதையில் இருந்த ஊழியர் - ரேஷன் கடையில் மக்கள் முற்றுகை
தென்காசி:
நியாய விலை கடையில் பணிபுரியும் ஊழியர் குடிபோதையில் இருந்ததால் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தென்காசி அருகேயுள்ள பண்பொழி கிராமத்தில் கூட்டுறவு சங்க பகுதி நேர நியாய விலைக் கடை உள்ளது.
இக்கடையில் பண்பொழி நாகம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சீனித்துரை என்பவர் கணக்காளராக (பில் கிளார்க்) பணி புரிகிறார். நேற்று சனிகிழமை நியாய விலை கடை கிடையாது.
ஆனால் இவர் மண்ணெண்னை விநியோகம் செய்வதற்காக மதியம் 2 மணி வந்தார். அப்போது முழு போதையில் இருந்துள்ளார். மண்ணெண்னை விநியோகத்தை தொடங்கியபோது முதலில் கள்ள மர்க்கெட் வியாபாரிகளுக்கு ஏராளமான லிட்டர் மண்ணெண்னை கடத்தி விட்டு பின்பு மக்களுக்கு விநியோகம் தொடங்கியுள்ளார்.
போதையில் வந்தது மட்டுமல்லாமல், மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை கள்ள மார்க்கெட் பேர்வழிகளுக்கு அவர் கொடுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதைப் பார்த்து கடை எடையாளர் பயந்து ஓடி விட்டார். சீனித்துரை, கடைக்குள் இருந்த இன்னொரு அறைக்குள் போய் உள்ளே மூடிக் கொண்டார்.
இதையடுத்து பொதுமக்கள் சீனித்துரை கடைக்குள்ளிருந்து வெளியே வர வேண்டும் என்று வலியுறுத்தி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.
அதிகாரிகளுக்குத் தகவல் போனது. ஆனால் யாரும் வரவில்லை. மாலை 6.30 மணியளவில் தென்காசி தாசில்தார் திருவேங்கடம் மற்றும் அதிகாரிகள் வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அந்த ஊழியரை மீட்டனர்.
குடிபோதையில் நியாய விலைகடைக்கு வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, அரசின் 2 ரூபாய் அரிசியை கடத்துவது போன்றவைகளை இந்த ஊழியர் செய்து வருவதாகவும் ஏற்கனவே 2 முறை பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications