புதுவை அரசை டிஸ்மிஸ் செய்க - அதிமுக
புதுச்சேரி:
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்த பந்த்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை மீறி புதுச்சேரியில் முழு அடைப்பை நடத்திய புதுவை காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அம்மாநில அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உண்ணாவிரதம் என்ற போர்வையில் புதுவையிலும் பந்த் நடத்தியுள்ளனர்.
இன்று காலை கடைகள் அனைத்தையும் திமுக கூட்டணியினர் கட்டாயப்படுத்தி மூடச் செய்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புதுவை காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் சாயா சர்மாவிடம் நாங்கள் புகார் கூறியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையிலானது. புதுச்சேரிக்கென தனியாக உத்தரவு தேவையில்லை. ஆனால் உண்ணாவிரதம் என்ற பெயரில் பந்த் நடத்தப்பட்டதைத் தடுக்கத் தவறி விட்டார் புதுவை முதல்வர் ரங்கசாமி என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications