கருணாநிதி மீது பெங்களூரில் வழக்குப் பதிவு
பெங்களூர்:
ராமரை பற்றி அவதூறாக பேசியதாக முதல்வர் கருணாநிதி மீது பெங்களூரு நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக தமிழ முதலமைச்சர் கருணாநிதி சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பாலத்தை கட்டிய ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று பேசினார்.
இந்த பேச்சின் எதிரொலியாக பெங்களூரில் உள்ள அவரது மகள் செல்வி வீடு மீது விஎச்பியினர் தாக்குதல் நடத்தினர். மேலும் தமிழக பேருந்து பெங்களூரில் எரிக்கப்பட்டு 2 அப்பாவிகள் பரிதாபமாக கருகி இறந்தனர்.
கருணாநிதியின் இந்த அவதூறு பேச்சைக் கண்டிக்கும் விதமாக அவர் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் பெங்களூரை சேர்ந்த விமலநாதன், சேரன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் பெங்களூரு நீதிமன்றத்திலும் தமிழக முதல்வர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கினை விசாரித்த மாஜிஸ்திரேட் வரும் 11ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications