ஈழத் தமிழர்களுக்காக புதிய தமிழகம் பேரணி
சென்னை:
இலங்கையில் பட்டினியால் வாடும் ஈழத்தமிழ் மக்களுக்காக புதிய தமிழகம் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
நிருபர்களுக்கு அவர் கொடுத்த பேட்டி:
கடந்த 30 வருடங்களாக நடைபெற்று வரும் ஈழத்தமிழர் விடுதலைப் போர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை போரை அங்கீகரித்து பேசுவதும் பின்னர் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவதும் என தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள்.
சமீப காலமாக ஈழத்தமிழர் போராட்டத்தில் மிகவும் மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. தினமும் 10 முதல் 15 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இங்குள்ள மத்திய, மாநில அரசுகள் அமைதியாக இருப்பது சரியல்ல.
புதிய தமிழகம் சார்பில் பேரணி:
இலங்கையில் பட்டினியால் வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கு மருந்து மற்றும் உணவு பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் அனுப்புவதற்கு தடை விதிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் 6ம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பாக எனது தலைமையில் பேரணி நடத்தப்படுகிறது.
இந்த பேரணியை பழ.நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பேரணி மன்றோ சிலையில் தொடங்கி கோட்டை நோக்கி செல்லும்.
உச்சநீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது:
சேது சமுத்திர திட்டப்பணியை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.
ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் போன்றவை நடத்துவதற்கு உரிமை உண்டு. இது ஜனநாயக உரிமையாகும். இதில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது என்று கூறினார் கிருஷ்ணசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications