வேலையை முடிக்காத காண்டிராக்டருக்கு ஃபைன் போட்ட கலெக்டர்
திருச்சி:
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வேலையை முடிக்காத காண்டிராக்டருக்கு ஒரு நாளைக்கு ரூ. 2,500 என அபராதம் விதித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு உட்பட்ட செட்டியாபட்டி, பொடங்குப்பட்டி, பன்னப்பட்டி, வேங்கைக் குறிச்சி ஆகிய கிராமங்களில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டன.
இந்தப் பணிகளின் நிலை குறித்து ஆட்சித் தலைவர் வச்சானி ஆய்வு நடத்தினார். அப்போது குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்காமல், பணிகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட காண்டிராக்டர் அப்படியே வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த காண்டிராக்டருக்கு ஒரு நாளைக்கு ரூ. 2500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த காண்டிராக்டர் ஏற்கனவே பணியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததால் அவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அக்டோபர் 15ம் தேதிக்குள் பணியை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காண்டிராக்டருக்கு ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications