திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் - ஸ்டாலின்
திருநெல்வேலி:
நெல்லையில் நடக்கவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக இளைஞரணி மாநில மாநாடு டிசம்பர் 16ம் தேதி நெல்லையில் நடக்கிறது. இன்று நெல்லை வந்துள்ள உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாடு நடக்க இருக்கும் மருத்துவக்கல்லூரி மைதானத்துக்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், திமுக சார்பில் மண்டல மாநாடு, வெள்ளிவிழா மாநாடு என்று பல்வேறு மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், இளைஞரணி மாநாடு நடத்த அனுமதி வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதையடுத்து முதன்முதலாக இளைஞரணி மாநில மாநாட்டை நெல்லையில் நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்காக தலைவர் மற்றும் பொது செயலாளருக்கு இளைஞரணி சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இம்மாநாடு கட்சியின் வளர்ச்சிக்கும், இளைஞரணியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும். இதில் 5 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
முழுக்க முழுக்க இளைஞரணி சார்பில் தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இம்மாநாடு வலு சேர்ப்பதாக அமையும் என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications