நிதி நிறுவன மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் ஒன்று முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி தொடங்கப்பட்டது. இதை நம்பிய பொது மக்கள் தங்களுடைய பணத்தை லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். மேலும் பலர் நகைகளை அடமானம் வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய அசலையும், வட்டியையும் குறிப்பிட்ட தனியார் வங்கி தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையே நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் இணைத்து சங்கம் தொடங்கினர். நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
இதற்கு மக்கள் உரிமை மற்றும் சமூக வளர்ச்சி கழக பொது செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். விளவங்கோடு தொகுதி எம்.எம்.ஏ ஜான்ஜோசப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசும் போது தனியார் நிதி நிறுவனத்தால் ஏமாற்றுபட்டவர்களுக்கு நிதி நிறுவனங்களின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏமாற்றப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க மார்க்கிஸ்ட் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
பின்னர் முதலீட்டாளர்கள் ஆட்சித் தலைவர் தேவ்ராஜ்தேவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications