நெல்லை- கூண்டோடு சரத்குமார் கட்சிக்கு தாவிய தேமுதிகவினர்
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டத்தில் தேமுதிகவினர் கூண்டோடு விலகி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தனர்.
நெல்லை மேற்கு மாவட்ட அஇசமக நிர்வாகிகள் கூட்டம் பாவூர்சத்திரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கீழப்பாவூர் நகர தேமுதிக தலைவர் ராமையா, செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஆபிரகாம் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் தங்கராஜ் முன்னிலையில் அஇசமகயில் இணைந்தனர்.
இதுகுறித்து செயலாளர் வேலுச்சாமி கூறும்போது சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் விஜயகாந்த் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என இரட்டை வேடம் பூண்டுள்ளார். எனவே கீழப்பாவூர் நகர தேமுதிகவை கூண்டுடோடு கலைத்து விட்டு அஇசமகவில் சேர்ந்துள்ளோம் என்றார்.
தேமுதிகவினர் நிர்வாகிகள் மொத்தமாக சரத்குமார் கட்சியில் இணைந்தது அக்கட்சியினரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications