பெண் எம்எல்ஏவை முற்றுகையிட்ட கிராம மக்கள்
தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றுநீரை குடிநீருக்கு சப்ளை செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள், எம்எல்ஏவை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியன் அனியாபரநல்லூர் பஞ்சாயத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க சாயர்புரம்-பெருங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய்கள் பதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது.
இதுவரை இந்த குழாய்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. ஆனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பு பிரிவு ஆவணங்களில் குடிநீர் வழங்கப்படுவதாக முறைகேடாக குறிப்பிடப்பட்டு வருகிறது.
ஐந்து ஆண்டுகளாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், தொகுதி எம்எல்ஏ இப்பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் நேற்று அனியாபரநல்லூர் ஊராட்சியில் உள்ள அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊராட்சி தலைவி சங்கரி தலைமையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜை முற்றுகையிட்டனர். உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி அவர்கள் மனு கொடுத்தனர்.
இதன் பின்னரும் தொடர்ந்து இப்பிரச்சனையில் அலட்சியம் காட்டினால் உண்ணாவிரதம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று எம்எல்ஏவை கிராம மக்கள் எச்சரித்தனர்.
எம்எல்ஏவை முற்றுகையி்ட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications