வந்த வேலையை மறந்த அமைச்சர்! தலைகீழாக நடந்த அரசு விழா!!
கடையநல்லூர்:
அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அதை மறந்து விட்டு பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பினார். கடைசி நேரத்தில் அதிகாரிகள் நினைவூட்டவே அவசரம் அவசரமாக அடிக்கல்லை நாட்டி விட்டுச் சென்றார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலத்தூரில் ரூ.1 கோடி செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாளகத்தில் 300 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சி தலைவர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி பாண்டியன், பீட்டர் அல்போன்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்பாத்துரை எம்பி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா மாலை ஆறரை மணிக்குத் தொடங்கியது. அனைவரும் சிறப்புரையாற்றினர். ஆனால் முதலில் "அடிக்கல் நாட்டு விழாவை" நடத்தாமல் மேடை பேச்சிலேயே முழுமையாக இருந்து விட்டு கூட்டம் முடிந்து இறை வணக்கமும் பாடி முடித்தனர்.
அதன் பின்னர்தான் அதிகாரிகளுக்கு இன்னும் அடிக்கல் நாட்டப்படவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அமைச்சரிடம் அதைத் தெரிவித்தனர். அதன் பின்னர் எட்டரை மணிக்கு அடிக்கல்லை திறந்து வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து அமைச்சர் உள்ளிட்டோர் கிளம்பிச் சென்றனர்.
தலைகீழாக நடந்த இந்த அரசு விழாவைக் கண்டு விழாவுக்கு வந்தோர் புலம்பியபடி சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications