முஷாரப்பின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் நொறுங்கி 4 பேர் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப்புக்குப் பாதுகாப்பாக சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், 4 பாதுகாப்பு அதிகாரிகள் பலியானார்கள். முஷாரப்பின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ரஷீத் குரேஷி படுகாயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் வஹீத் அர்ஷத் கூறுகையில், அதிபர் முஷாரப் முசாபராபாத்துக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்குப் பாதுகாப்புக்காக எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரில் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர்.
முசாபராபாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலியானார்கள். அதிபரின் செய்தித் தொடர்பாளர் குரேஷி படுகாயமடைந்தார். அதிபர் சென்ற ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி நடந்த பயங்கர நிலநடுக்கத்தில் 73 ஆயிரம் பலியானதன் நினைவு நாளையொட்டி முசாபராபாத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ளவே முசாபராபாத்துக்கு முஷாரப் சென்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications