லைட் எரியாததால் 6 மணி நேரம் தாமதமான சென்னை-பாரிஸ் விமானம்!!
சென்னை:
விமானத்தின் வால் பகுதியில் லைட் எரியாததால், பாரீஸ் செல்லவேண்டிய விமானம் 6 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னையிலிருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு பாரீஸ் செல்லவேண்டிய ஏர்-பிரான்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்த பின்னர் விமானம் புறப்பட தயாராக இருந்தும் சிக்னல் கிடைக்காததால் தாமதம் ஆனது.
ஆனால் வெகுநேரமாக சிக்னல் கிடைக்காததால் விமானத்தின் பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஏன் சிக்னல் கொடுக்கவில்லை என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் விமானத்தின் வால்பகுதியில் இருக்கும் லைட் எரியவில்லை. அதனால் சிக்னல் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
உடனே இறங்கி பார்த்த பைலட், விமானப் பொறியாளர்களை அழைத்து சரி செய்ய சொல்லியுள்ளார். அவர்கள் அதை பார்த்த சோதனை செய்ததில், விமானத்தின் லைட் பழுதடைந்துள்ளது தெரியவந்தது.
நள்ளிரவு நேரம் என்பதால் அதனை சரிசெய்தால் தான் விமானம் புறப்படும் என்பதால், அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர்.
அதற்குள் விடிந்துவிட்டது. இருப்பினும் விமானத்தின் லைட் சரிசெய்யப்படவில்லை. ஆனால் பகலில் செல்ல இந்த விளக்கு தேவையில்லை என்பதால் கிட்டத்திட்ட 6 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு, காலை 6.30 மணிக்கு விமானம் பாரீஸ் புறப்பட்டு சென்றது.
விமானத்திலிருந்த 137 பயணிகளும் இதனால் பெரும் அவதிக்குள்ளாகினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications