டிஐஜி வீட்டு வேலைக்கு சென்ற கைதி தப்பி ஓட்டம்
திருச்சி:
திருச்சி சிறைத்துறை டிஐஜியின் வீட்டிற்கு வேலைக்கு சென்ற கைதி தப்பி ஓடிவிட்டார்.
சிறைத்துறையை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் சிறை வளாகப் பணிகளுக்கு ஆயுள் தண்டனை கைதிகளை பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஐஜியாக இருப்பவர் எஸ்ரா. இவருடைய வீட்டு வேலைக்கு கைதிகள் அனுப்பப்பட்டனர்.
வேலை முடிந்து மாலையில் அனைத்து கைதிகளும் சிறைக்கு திரும்பினர். அதில் மோகன் என்ற கைதி மட்டும் வரவில்லை. இதனால் பதட்டம் அடைந்த சிறைத்துறை காவலர்கள் டிஐஜியின் வீடு மற்றும் அப்பகுதிகளில் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.
டிஐஜியின் வீட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்திலிருந்து மோகன் தப்பிவிட்டது தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மோகனுக்கு கடந்த ஜூன் 13ம் தேதி திருட்டு வழக்கு சம்பந்தமாக 2 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறை வளாகப் பணிகளுக்கு ஆயுள் தண்டனை கைதிகள் தான் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் மோகன் ஆயுள் தண்டனை கைதி கிடையாது. இந்நிலையில் அவர் தப்பி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications