சாலையை சீரமைக்க வலியுறுத்தி பின்னோக்கி நடந்து நூதனப் போராட்டம்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி - கக்கனாலா தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி கூடலூரைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் ஊட்டியில், பின்னோக்கி நடந்து நூதனப் போராட்டத்தை நடத்தினர்.
ஊட்டி - கக்கனாலா தேசிய நெடுஞ்சாலை படு மோசமாக இருப்பதால் வாகனதாரர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன.
இந்த சாலையைப் பரமாரிக்க வேண்டிய பொறுப்பு மத்திய நெடுஞ்சாலைத் துறையிடம் உள்ளது. ஆனால் சாலையைப் பராமரிக்க ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் கோபமடைந்த கூடலூர் பகுதி மக்கள் 2000க்கும் மேற்பட்டோர், போராட்டத்தில் குதிக்க தீர்மானித்தனர்.
வழக்கமான போராட்டமாக இருந்தால் கவனிப்புக்கு ஆளாகாமல் போய் விடும் என்பதால் பின்னோக்கி நடந்து நூதனப் போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.
ஊட்டி நகராட்சி அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அனைவரும் பின்னோக்கி நடந்து வந்தனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலையை சீரமைக்காவிட்டால், 12 மணி நேர பந்த் நடத்தவும் மக்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கும் பலன் இல்லாவிட்டால் 24 மணி நேர பந்த், 72 மணி நேர பந்த் என பல திட்டங்களை மக்கள் வகுத்துள்ளனர்.
இந்த நூதனப் போராட்டத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications