சென்னை-தூத்துக்குடியில் இரு கொலைகள்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அதிமுக கிளைச் செயலாளரின் அண்ணன் மர்ம கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ராஜபாண்டிநகரை சேர்ந்தவர் அருணாசலம். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று அதிகாலை திருச்செந்தூர் ரோட்டில் உள்ள பெரியசாமி நகர் உப்பளம் பகுதியில் கை, கால் மற்றும் தலை உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்தார்.
அருணாசலத்தின் மனைவி திருமணமான சில நாட்களில் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவரது தம்பி ஆறுமுகம் ராஜபாண்டி நகர் அதிமுக செயலாளராக இருக்கிறார். அருணாசலம் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் நாயை கட்டி போட பயன்படும் இரும்பு சங்கிலி ஒன்று கிடந்தது.
எனவே நள்ளிரவில் அவரை கடத்தி வந்த மர்ம நபர்கள் இரும்பு சங்கிலியால் கழுத்தை நெரித்து மயக்கமாக்கிவிட்டு வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சென்னையில் சாராய வியாபாரி கொலை:
இந் நிலையில் சென்னையில் சாராய வியாபாரி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருமைராஜ் (24). கள்ளச் சாராயம் விற்று வந்த அருமைராஜ், சமீபகாலமாக மீன்பாடி வண்டி ஓட்டி வந்தார்.
இந் நிலையில் இன்று காலை அருமைராஜ் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அருமைராஜ் கடந்த 3 வருடங்களாக புளியந்தோப்பை சேர்ந்த ஜானகி என்பவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். ஜானகியுடன் சுரேஷ் என்பவரும் தொடர்பு வைத்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
அருமைராஜ் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அப்பன்னா, துரை ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும் சுரேஷ், புளியங்கொட்டை இளங்கோ, கள்ளக் காதலி ஜானகி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications