ஆங்கிலம் தெரியாத துபாய் பிளஸ்டூ மாணவர்கள்!
துபாய்:
துபாயில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அவர்களது பெயரைக் கூட ஆங்கிலத்தில் படிக்கத் தெரியவில்லை என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது.
கிராமத்து மாணவ, மாணவிகளுக்குத்தான் ஆங்கிலம் சிரமம் தரும் என்பது ரொம்ப காலமாக இருந்து வரும் ஒரு குறை. ஆனால் இன்று நகரத்து மாணவ, மாணவிகளைக் கூட தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு கிராமத்து மாணவ, மாணவிகள் கலக்க ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் துபாயில், 12ம் வகுப்பு படிக்கும் மாணாக்கர்களுக்கு தங்களது பெயரைக் கூட ஆங்கிலத்தில் படிக்கத் தெரியவில்லை என்ற அதிர்ச்சிகரமான அதேசமயம் ஆச்சரியமான உண்மை வெளியாகியுள்ளது.
துபாய், பொது கல்வித்துறை சார்பில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது.
12 வருடங்களாக ஆங்கில மீடியத்தில் படித்து வரும் பெரும்பாலான மாணாக்கர்களுக்கு தங்களது பெயரைக் கூட ஆங்கிலத்தில் எழுத்திக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லையாம். இத்தனைக்கும் இவர்கள் அனைத்து பரீட்சைகளையும் ஆங்கிலத்தில்தான் எழுதி தேறி வந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் பெயர் எழுதச் சொன்ன மாணாக்கர்களில் 90 சதவீதம் பேருக்கு முறையாக தங்களது பெயர்களை எழுதத் தெரியவில்லையாம்.
இந்தக் குறையை நீக்க பல்வேறு நடவடிக்கைகளை துபாய் கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications