சந்திரபாபுவுக்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு!
ஹைதராபாத்:
தெலுங்கு தேச தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு செல்லும் இடமெல்லாம் செருப்பு வீச்சும், கல்வீச்சும் நடப்பதால் நாயுடு டென்ஷன் ஆகியுள்ளார். முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு தற்போது அமலாபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவருடன் ஏராளமான சொகுசு கார்களில் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்கள் செல்கிறார்கள்.
நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு முளுகு என்ற கிராமத்திற்கு சென்ற போது தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அவர் மீது செருப்பை வீசினார்கள். அப்போது கார் வேகமாகச் சென்றதால் செருப்பு படாமல் தப்பித்தார் நாயுடு.
நேற்று சாயம்பேட்டை என்ற இடத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது மயிலாரம் என்ற இடத்தில் அவரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். 9 ஆண்டுகளாக முதல்வராக இருந்தபோது ஒரு முறை எங்களது பகுதிக்கு நீங்கள் வந்ததில்லை. தேர்தல் வரப் போகிறது என்றவுடன் இப்ேபாது வருகிறீர்களா என்று ஆவேசமாக கேட்டனர்.
அப்ேபாது ஒருவர் நாயுடுவை நோக்கி செருப்பை எடுத்து வீசினார். அது நாயுடு இருந்த வாகனத்தில் வந்து விழுந்தது. இதைப் பார்த்து நாயுடு பெரும் அப்செட் ஆனார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆந்திராவில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. ஒரு முன்னாள் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை. அப்படியானால் பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்கள்.
எனது ஆட்சியின் போது ராஜகேசரரெட்டி 1600 கி.மீ. தூரம் பாத யாத்திரை சென்றார். அப்போது அவருக்கு நான் உரிய பாதுகாப்பு கொடுத்தேன். ஆனால் தற்போது நான் செல்லும் இடமெல்லாம் கல், செருப்புகள் வீசப்படுகின்றன. போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து நான் ஆட்சிக்கு வந்தால், அராஜகத்திற்கு துணை போகும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றார் நாயுடு.
நாயுடு செல்லும் இடமெல்லாம் செருப்பு வீச்சு நடந்து வருவது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications