4 வழி சாலையாகிறது ஈ.சி.ஆர்.
சென்னை:
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பல்வேறு நெடுஞ்சாலைத் துறை திட்டப் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைத் துறை செயலாளர், நிதித் துறை செயலாளர், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமைச் செயல் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆய்வு நடத்தினர்.
அதில் அரசு சாலைகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ரூ. 2,625 கோடியும், பராமரிப்புப் பணிகளுக்கு ரூ. 723 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 7,200 கி.மீ. நீள சாலைப் பணிகளையும், புதுப்பிக்கப்பட்டு வரும் 9,000 கி.மீ. நீளச் சாலைப் பணிகளையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கவும் கருணாநிதி உத்தரவிட்டார்.
ஒரகடம் தொழில் பூங்கா பகுதியில் ரூ. 300 கோடி மதிப்பில் 4 வழித் தடச் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
ரூ. 70 கோடி மதிப்பில் திருப்பூர் நகரில் சுற்றுச்சாலை பணியையும், ரூ. 27 கோடியில் கோயம்புத்தூர் அவினாசி சாலையை 6 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியையும், மதுரை வட்டச் சாலைகள் திட்டத்தின் 2ம் கட்டப் பணியையும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கவும் உத்தரவிட்டார்.
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான 20 கி.மீ. நீள ராஜீவ்காந்தி சாலையை வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை விரைவாகவும், ரூ.600 கோடி மதிப்பீட்டிலான சாலை மற்றும் பாலப் பணிகள் முழுவதையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் கிழக்குக் கடற்கரை சாலையை 4 வழிச் சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறும் கருணாநிதி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications