கள்ளக்காதலனுடன் பெண் போலீஸ் தற்கொலை ஏன்? - பரபரப்பு தகவல்கள்
தென்காசி:
வக்கீல் கணவரைக் கொன்று விட்டு கள்ளக் காதலனுடன் குற்றாலத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டது குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திண்டிவனம் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். பிரபல வக்கீல். இவருக்கும் திண்டிவனம் மீனாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகள் வைதேகிக்கும் திருமணம் நடந்தது. வைதேகி போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு 14 மற்றும் 8 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த 2004ம் வைதேகி ஏட்டு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வக்கீல் நடராஜன் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த சண்முகநாதன் என்பவரை தனது கார் டிரைவராக பணியில் அமர்த்தினார்.
இதை தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த வைதேகிக்கும், கார் டிரைவர் சண்முதநாதனுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் உல்லாசமாக இருந்தனர்.
அவ்வப்போது வெளியூர்களுக்கு சென்றும் கணவன்-மனைவி போல் தங்கி ஜாலியாக இருந்தனர். இதையறிந்த நடராஜன் அவர்களை கண்டித்தார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி காலை படுக்கையறையில் நடராஜன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வைதேகியை காணவில்லை.
இதுகுறித்து நடராஜனின் அண்ணன் மகனான வக்கீல் கணேஷ் திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது சித்தப்பா சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர் இறந்த நாளில் இருந்து சித்தி வைதேகி மற்றும் கார் டிரைவர் சண்முகநாதன் ஆகயோர் மாயமாகி விட்டதாகவும் கூறி இருந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மாயமான வைதேகி, சண்முகநாதன் ஆகியோரையும் தேடி வந்தனர்.
இதற்கிடையே கள்ளக்காதலர்கள் இருவரும் பெங்களூர் சென்று தங்கினர். பின்னர் அங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு சென்ற அவர்கள் நேற்று முன்தினம் குற்றாலம் வந்தனர். ஐந்தருவி செல்லும் பாதையில் உள்ள ரெஸ்ட் ஹவுஸில் தங்கினர்.
தடம் மாறிய நாம் தவறு செய்து விட்டோம். இனியும் நம்மால் சேர்ந்து வாழ முடியாது. எனவே இருவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தனர். இருந்தாலும் சண்முகநாதன் மீது அதிக ஆசை வைத்திருந்த வைதேகி கடைசியாக தனது கழுத்தில் தாலி கட்டுமாறு கூறினார்.
அதன்படி நேற்று முன்தினம் காலை அவரும் புதிய மஞ்சள் கயிறை அவரது கழுத்தில் கட்டினார். அன்று பகல் முழுவதும் அவர்கள் உல்லாசமாக இருந்தனர். இரவு 9 மணியளவில் அவர்கள் தங்கியிருந்த ரெஸ்ட் ஹவுஸின் முன் அறையில் உள்ள ஒரு இரும்பு கொக்கியில் வைதேகியின் சுடிதார் துப்பட்டாவில் இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மாலையிலேயே விடுதியை காலி செய்வதாக கூறிய அவர்கள் இரவு 9 மணி ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த விடுதி காவலாளி உள்ளே பார்த்துள்ளார். அப்போது இருவரது உடலும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குற்றாலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அங்கு சென்ற போலீசார் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டில் வைதேகி எழுதிய ஒரு கடிதத்தையும் கைப்பற்றினார். அதில் வைதேகி குறிப்பிட்டிருந்ததாவது
குற்றாலம் இன்ஸ்பெக்டருக்கு வைதேகி எழுதுவது, 1991ம் இருந்து 2004 வரை காவலராக பணியாற்றினேன். நானும் என்னுடன் வந்த சண்முகநாதன் என்பவரும் தற்கொலை செய்து கொள்கிறோம். எஙகள் தற்கொலைக்கு யார் தூண்டுதலும் காரணம் கிடையாது. இந்த செய்தியையோ, புகைப்படத்தையோ யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று எழுதியுள்ள அவர் அதில் வீட்டு போன் நம்பரையும் திண்டிவனம் காவல்நிலைய நம்பரையும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவல் திண்டிவனம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.பி அமல்ராஜ் உத்தரவின் பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி குமார் தலைமையில் போலீஸ் குற்றாலம் விரைந்துள்ளனர்.
கார் டிரைவர் சண்முகநாதனுடன் தனது மனைவி கள்ளத் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த நடராஜன் அவர்களை கண்டித்துள்ளார். மேலும் சண்முகநாதனை வேலையில் இருந்து நிறுத்தவும் முடிவு செய்துள்ளார். இது இருவரையும் மிகவும் பாதித்தது. தங்கள் உறவை இழக்க அவர்கள் தயாராக இல்லை.
இந்தநிலையில் தான் நடராஜன் கடந்த 3ம் தேதி படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தங்கள் கள்ள தொடர்புக்கு நடராஜன் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்து விடலாம் என வைதேகியும் சண்முகநாதனும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி அவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது அவர்களும் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கு விசாரணை தடைபட்டுள்ளது.
மனைவி மற்றும் கார் டிரைவரால் நடராஜன் கொலை செய்யப்பட்டரா அல்லது மனைவியின் நடத்தையால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications