'குப்பை' இ-மெயில் வந்தால் கேஸ் போடலாம்!
டெல்லி:
தேவையில்லாமல் 'ஜங்க் இ-மெயில்'களை அனுப்புவோர் மீது வழக்கு தொடரும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது செல்போன்களில் தேவையில்லாமல் வரும் அழைப்புகளைத் தடுக்க அரசு வசதி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்டர்நெட்டைப் பயன்படுத்துவோருக்கு அனுப்பப்படும் தேவையில்லாத ஜங்க் இ மெயில்களைத் தடுக்கவும் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி ஜங்க் இ மெயில்களை அனுப்புவோர் மீது நெட் பயன்பாட்டாளர்கள் வழக்கு தொடர வகை செய்யும் விதத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
இதற்காக 2006ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 40வது பிரிவில் புதிய விதிமுறையை இணைக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக இணைக்கப்பட வேண்டிய வாசகங்கள் குறித்து தற்போது அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இதுதவிர எனக்கு மெயில் செய்யாதீர்கள் என்ற புதிய (செல்போன்களில் என்னை அழைக்காதீர்கள் என்று தற்போது கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறையைப் போல) பதிவு முறையை அமல்படுத்துவது குறித்தும் அரசு ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.
தவறான, அவதூறான மெயில்களை அனுப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை, அல்லது பாதிப்புக்கேற்ற நஷ்ட ஈட்டைக் கோர முடியும். மேலும் குற்றம் மோசடிப் பிரிவின் (பிரிவு 420) கீழ் வந்தால் தண்டனைக் காலம் 7 ஆண்டுகள் வரை இருக்கும்.
இ மெயில் மூலம் தவறான வாக்குறுதி அளிப்போர், பணம் தருவதாக உறுதியளித்து ஏமாற்றுவோர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications