நெல்லையில் கோஷ்டி மோதல் - 5 பேர் கைது
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் கருவந்தா என்ற இடத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்துமலை அருகே உள்ளது கருவந்தா ஊராட்சி. இங்கு பொது நல்லியில் தண்ணீர் பிடிப்பதில் நேற்று மாலை இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனர்.
ஒரு பிரிவினர் வசிக்கும் தெருவுக்குச் செல்லும் குடிநீர் குழாயை மற்றொரு கோஷ்டியினர் அடைத்து வைத்து விட்டனர். இது குறித்து அவர்கள் ஊராட்சி தலைவி ஜெயா அன்பு ரூபியிடம் முறையிட்டனர்.
இதையடுத்து ஊராட்சி தலைவியின் கணவர் செல்வம் இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். அப்போது ஊராட்சி ஊழியரான சுப்பன் மகன் மாடசாமி என்பவர் குழாய் அடைப்பை நீக்காவிட்டால் நாளை மொத்தமாக அனைத்து குழாய்களையும் அடைத்து விடுவோம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கோஷ்டியினர் மாடசாமியை அடித்து உதைத்தனர்.
இதை தடுக்க முயன்ற அவரது உறவினர்களை அரிவாளால் வெட்டினர். இதில் பாலகிருஷ்ணன், கருப்பசாமி, பெருமாள், சேர்வராயன், செல்லத்துரை மனைவி இசக்கியம்மாள், சுப்பன், மாடசாமி மனைவி சரோஜா ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் எஸ்.பி ஸ்ரீதர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பாலுசாமி, அழகு, பெரியகண்ணன், செல்லக்காளை, முருகன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கோஷ்டி மோதலை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications