50 ரூபாய் பாக்கி வைத்தவருக்கு அரை மொட்டை!
புளியங்குடி:
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே கோவில் விழாவுக்கு 50 ரூபாய் வரி பாக்கி வைத்ததற்காக வாலிபருக்கு அரை மொட்டை போட்ட அநியாயம் நடந்துள்ளது.
புளியங்குடி சிந்தாமணியில் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் கொடை விழா நடக்கும். இந்தாண்டு கொடை விழா துவங்கியது.
அதேபகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி நாடார் மகன் சண்முகையா கோவிலுக்கு மொட்டை போடுவதாக நேர்த்தி கடன் செய்திருந்தார். அதன்படி காலை கோவிலுக்கு மொட்டை போட வந்தார். சவர தொழிலாளி அவருக்கு மொட்டையடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஊர் நாட்டாமை ஆறுமுகம், கோவில் நிர்வாக செயலாளர் செல்வம், பொருளாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் சண்முகைய்யாவை மொட்டை போட விடாமல் தடுத்துள்ளனர்.
கோவிலுக்கு வரி பாக்கி உள்ளது. கடந்த வருடமே நீ வரி கொடுக்கவில்லை என்று தகராறு செய்தனர். இதையடுத்து சண்முகையா ரூ.500 கொடுத்தார். ஆனால் ரூ.550 தந்தால் தான் மொட்டை போட விடுவோம் என்று கறாராக கூறினர். ஆனால் சண்முகையா ரூ.550 கொடுக்க மறுத்தார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரூ.50 தகராறில் அவரை மொட்டை போட விடாமல் பாதியிலேயே திருப்பி அனுப்பினர் கோவில் நிர்வாகிகள்.
அரைகுறை மெட்டையுடன் கோவிலை விட்டு வெளியே வந்த சண்முகையா அவமானம் தங்காமல் புளியங்குடி டி.எஸ்.பியிடம் புகார் செய்தார். புளியங்குடி போலீசார் நாட்டாண்மை ஆறுமுகம் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications