மலையில் நிலச்சரிவு-ஆற்றில் பஸ் கவிழ்ந்து 41 பேர்
டேராடூன்:
ரிஷிகேசுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள் சென்ற பேருந்து டேராடூன் அருகே நிலச்சரிவால் மலைப்பாதையில் உருண்டு நதியில் மூழ்கியதில் 41 பயணிகள் உயிரிழந்தனர்.
ஒரிஸ்ஸா மாநிலத்தை சேர்ந்த 45 பேர் பேருந்தில் புனித பயணம் மேற்கொண்டனர். பத்ரிநாத் கோவிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு நேற்று மாலை ரிஷிகேஷ் சென்று கொண்டிருந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள விஷ்ணு பிரயாக் என்ற இடத்தில் உயரமான மலைப் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது மலைப் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து மிகப் பெரிய பாறை உருண்டு வந்து பேருந்தின் மீது மோதியது.
இதையடுத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலையில் உருண்டு அலக்நந்தா ஆற்றுக்குள் மூழ்கிவிட்டது.
இதில் பேருந்துக்குள் இருந்த பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர். தீயணைப்புப்படை மற்றும் போலீசார் விரைந்து வந்து கயிறு மூலம் பேருந்தை கரைக்கு கொண்டு வந்தனர்.
அதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். பேருந்துக்குள் இருந்து 41 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போனவ 2 பேரின் உடல்களை தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications