அவதூறாக பேசிய அதிமுக கவுன்சிலர் கைது
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சித் தலைவியை அவதூறாகப் பேசியது தொடர்பாக அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி நகராட்சி தலைவியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மல்லிகா உள்ளார். தங்களது வார்டுகளுக்கு பணிகள் எதுவும் நடக்கவில்லை என்றும், நகராட்சித் தலைவி மீது ஊழல் புகார் கூறியும் பெரும்பாலான கவுன்சிலர்கள் நெல்லை நகராட்சி மண்டல இயக்குனரிடம் மனு அளித்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த மாதம் 20ம் தேதி கவுன்சிலர்கள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனை செய்வதற்கான நகராட்சி சிறப்பு கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய தினம் நகராட்சி மண்டல இயக்குனர் விடுப்பில் சென்றதால் தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனை கண்டித்து பெரும்பாலான கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது கோவில்பட்டி உசேன் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகனும், 16வது வார்டு அதிமுக கவுன்சிலருமான ராமர் என்பவர் நகராட்சித் தலைவி மல்லிகாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமர் மீது பொய் வழக்கு போட்டதாகக் கூறி நகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கடந்த 10ம் தேதி கவுன்சிலர் ராமரை உடனடியாக கைது செய்யகோரி அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
அதேசமயம், கவுன்சிலர் ராமர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற கோரி நகர அதிமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில் கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அதிமுக கவுன்சிலர் ராமரை கைது செய்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications