தேமுதிகவுக்குத் தாவிய திமுக நிர்வாகிகள்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூரில் திமுக முக்கிய நிர்வாகிகள் தேமுதிகவில் இணைந்ததால் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத் திமுகவை சேர்ந்த அரும்பாவூர் பேரூராட்சி துணை தலைவர் தங்கராஜ், கவுன்சிலர்கள் ரூபாதி ருப்பதி, கவுரி நடராஜன், மற்றும் மதிமுக நகர செயலாளர் வரராஜன் உள்பட 25 பேர் தங்களை தேமுதிகவில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களை தேமுதிக மாவட்ட செயலாளர் துரை காமராஜ் சாலவை அணிவித்து வரவேற்றார்.
மத்திய அமைச்சர் ராசாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூர் திமுகவிலிருந்து முக்கியப் புள்ளிகள் சிலர் தேமுதிகவுக்குத் தாவியதால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications