விரைவில் புல்லட் ரயில்: வேலு
சென்னை:
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் தீவிர ஆர்வம் காட்டி வருவதால் இந்தியாவில் விரைவில் புல்லட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இந்தியன் வங்கி இணைந்து நடத்திய கருத்தரங்கில் வேலு கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், தங்களது மாநிலங்களில் புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. புல்லட் ரயில்களால் பயண நேரம் வெகுவாக குறையும்.
பல்வேறு மாநிலங்களும் புல்லட் ரயில் திட்டம் குறித்து ஆர்வமாக இருப்பதால் விரைவில் இந்தத் திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் நடைமுறைப்படுத்தும்.
டெல்லி முதல் மும்பை வரையிலும் மற்றும் லூதியானா முதல் கொல்கத்தா வரையிலுமான 3000 கிலோமீட்டர் தொலைவுக்கு சரக்கு ரயில்களுக்கான தனி ரயில் பாதை அமைக்கும் திட்டம் ரூ. 30,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.
2வது கட்டமாக சென்னை முதல் கோவா வரையிலும், டெல்லி முதல் கொல்கத்தா வரையிலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார் வேலு.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications