டயோசீஸ் தேர்தல் அடிதடி-பாதிரியார் மீது வழக்கு
திருநெல்வேலி:
டயோசீஸ் தேர்தல் தொடர்பாக சங்கரன்கோவில் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாதிரியார் உட்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நெல்லை டயோசீஸ் தேர்தல் கடந்த 7ம் தேதி துவங்கியது. ஏ.டி.ஜே.சி தினகர் மற்றும் வேதநாயகம் ஆகிய இரு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் செயலர், குருத்துவ செயலாளர் மற்றும் உதவித் தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இதிலும் ஏ.டி.ஜே.சி.தினகர் மற்றும் வேதநாயகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்பலாபுரம் சேகரத்தில் தேர்தல் தொடர்பாக ஏ.டி.ஜே அணியைச் சேர்ந்த பவுல் என்பவருக்கும் வேதநாயகம் அணியை சேர்ந்த அருளானந்தம் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இரு அணியை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். இதில் அருளானந்தம், பவுல் ஆகியோர் பலத்தக் காயமடைந்தனர். அருளானந்தம் பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதல் சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அருளானந்தத்தை தாக்கிய சுப்புலாபுரம் பாதிரியார் கிங்ஸ்லி ஜான், அவரது உதவியாளர் பர்ணபாஸ், மற்றும் ஜான் கென்னடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போல் பவுல் கொடுத்த புகாரின் பேரிலும் அருளானந்தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுப்புலாபுரம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications