முதல்வரை கண்டித்து இந்து முன்னணி ஊர்வலம்!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இன்று தமிழக முதல்வரைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் கருணாநிதியைக் கண்டித்தும், சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றிடத் துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும் தூத்துக்குடி பெருமாள் கோவில் முன்பிருந்து ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்திற்கு மாநில இந்து முன்னணி அமைப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார்.
ஊர்வலத்தில் மத்திய, மாநில அரசை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ராமர், சீதை, அனுமன் வேடமணிந்தவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி நகரின் முக்கியான வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் இறுதியாக தூத்துக்குடி சப்-கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications