கட்டடம் இடிந்து 4 பேர் பலி
அம்பாசமுத்திரம்:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் இடிபாடுகளில் புதைந்து பலியானார்கள்.
நெல்லை மாவட்டத்தை அடுத்துள்ள கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது.
நேற்று கோவிலில் கான்கிரீட் தளம் போடும் பணி நடந்தது. இந்தப் பணியில் 20க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வேலைகள் நடைபெறுவதை பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் முருகன் (30) பார்வையிட வந்தார்.
அந்த நேரத்தில் கோவில் மேற்கூரை திடீரென்று பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி பஞ்சாயத்துத் தலைவர் முருகன், கண்ணன் (32), தொழிலாளர்கள் சுப்பு (48) மற்றும் சக்திவேல் (15) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அம்பாசமுத்திரம் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தகளை மீட்டனர். 13 பேர் படுகாயங்களுடன் நெல்லை மற்றும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications