தந்தையை அடித்துக் கொன்ற மகன்
சென்னை:
திருமணம் செய்து வைக்காத கோபத்தில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்துள்ள மாங்காட்டில் வசித்து வந்தவர் ஜலீல் முகம்மது (57). இவருக்கு ஜீனத் என்ற மனைவியும், கரிமுல்லா (27), காதர் முகைதீன் (30) என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள்.
கரிமுல்லா மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். 2வது மகன் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே, தனக்கு கல்யாணம் செய்து வைக்குமாறு தந்தையை வற்புறுத்தி வந்துள்ளார் காதர் முகைதீன். ஆனால் வேலைக்குப் போகாமல் ஊர்சுற்றி வரும் உனக்கு திருமணம் செய்து வைத்து, ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்க மாட்டோம் என்று ஜலீல் முகம்மது கூறியுள்ளார்.
இதனால் காதர் முகைதீன் அப்செட் ஆனார். நேற்று மீண்டும் கல்யாணப் பேச்சை எடுத்துள்ளார். அப்போது அவருக்கும், பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அடிதடியாக மாறியது.
தனது தாயாரை ஆவேசமாக அடித்துள்ளார் முகைதீன். இதைப் பார்த்த ஜலீல் கோபமடைந்து, தாயையே அடிக்கிறாயா என்று கேட்டபடி முகைதீனை அடித்துள்ளார்.
இதைக் கண்டு கோபமடைந்த முகைதீன், கீழே கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் சரமாரியாக அடித்துள்ளார். இடுப்புக்குக் கீழும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ஜலீல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அதன் பின்னர் காதர் முகைதீன் தப்பி ஓடிவிட்டார். ஜீனத் மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காதர் முகைதீன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜீனத், போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் காதர் முகைதீனை தேடி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications