புலிகளுடன் தார்மீக உறவு: திருமா.
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இடையே தார்மீக உறவுதான் உள்ளது. நேரடியாக அவர்களுக்கு நாங்கள் பொருட்களை கடத்துகிறோம் என்பதை நிரூபி
த்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்றதாக சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெளியீட்டுப் பிரிவு செயலாளர் வன்னிஅரசு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், விடுதலைப் புலிகளுக்கும் எங்களது கட்சிக்கும் இடையே தார்மீக உறவுதான் உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் நேரடியாக உதவினோம் என்பதை நிரூபித்தால் தாராளமாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
எங்களது கட்சிப் பிரமுகர் கைது விவகாரத்தில் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் சிலரின் சதி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். மதவாத சக்திகளுடன் தொடர்புடைய அவர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக நாங்கள் ஊகிக்கிறோம்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஒரு கட்சியுடன் திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாக நினைக்க வைக்கவும், முதல்வர் கருணாநிதிக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் சதியாகவும் இதை நாங்கள் கருதுகிறோம் என்றார் திருமாவளவன்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications