கிரிக்கெட் வீரர்கள் விமானத்தில் பறவை மோதல்-அவசரமாய் தரையிறக்கம்
நாக்பூர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பயணித்த விமானத்தில் பறவை மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நாக்பூரிலிருந்து மும்பைக்கு இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் கிளம்பியது. இந்த விமானத்தில், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருந்தனர்.
விமானம் கிளம்பிய 10 நிமிடத்தில் மீண்டும் விமானத்தில் தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு விமானத்தில் இருந்த வீரர்களும் மற்ற பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.
கிரிக்கெட் வீரர்கள் நாக்பூர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். இவர்களை தனி விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் என்ன கோளாறு என்பது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கூறுகையில், விமானம் கிளம்பியபோது ஒரு பறவை விமான என்ஜின் பகுதியில் மோதியது. இதில் 2வது என்ஜினின் 9 பிளேடுகள் சேதமடைந்தன. இதையடுத்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications