நகை கடைகளில் மோசடி செய்த வாலிபர் கைது
புளியங்குடி:
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் உள்ள நகைக் கடையில் ரூ.2.5 லட்சம் ரூபாய் மோசடி செய் வடநாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், சாங்க்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா சேட். கடந்த 5 வருடங்களாக புளியங்குடியில் குடும்பத்துடன் வசித்த வரும் இவர் இவர் அப்பகுதியில் தனியாக கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இவர் புளியங்குடியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர்களை அதிக அளவில் பழக்கம் ஏற்படுத்தி கொண்டார். பல ஆண்டுகளாக பழகியதால் நகைக்கடை உரிமையாளர்கள் அனைவரும் கிருஷ்ணா சேட் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தனர்.
கிருஷ்ணா, நகைக் கடைகளில் இருந்து முன்பணம் எதுவும் செலுத்தாமலே நகைகளை பெற்று விற்பனை செய்து வந்துள்ளார். விற்ற பணத்தில் நகைக்கடை உரிமையாளர்களுக்கு கமிஷன் போக மீதிப் பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த மாதம் புளியங்குடி காந்தி பஜாரில் உள்ள நகைக்கடை அதிபர்களான முருகேசனிடம் 52 கிராம் எடையுள்ள 2 செயின்கள், பழனியிடம் 56 கிராம் எடையுள்ள 3 நெக்லஸ், கந்தசாமியிடம் 25 கிராம் எடையுள்ள 6 மோதிரங்கள் மற்றும் புதுமனை தெருவைச் சேர்ந்த மீரா ஷாவிடம் நகைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வாங்கியிருந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.43 லட்சம் ஆகும்.
கடந்த 24ம் தேதி முதல் கிருஷ்ணா சேட்டை காணவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புளியங்குடி போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் கருடகோன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் புளியங்குடியில் ஒரு தனியார் லாட்ஜில் கிருஷ்ணாசேட் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த கிருஷ்ணா சேட்டை கைது செய்தனர். அவரிடம் இருந்து 133 கிராம் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரத்தை கைப்பற்றினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications