மயிலாடுதுறையில் பாஜக பொதுக் கூட்டத்தில் திமுக கலாட்டா
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் திமுகவினர் புகுந்து கல் வீசி தாக்குதல் நடத்தினர். பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா பாதியிலேயே பேச்சை நிறுத்திவிட்டு மேடையில் இருந்து தப்பியோடினார்.
மயிலாடுதுறையில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் சமீபத்தில் தாக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை திமுகவினர்தான் தாக்கினார்கள் என்று கூறி அதை கண்டிக்கும் வகையில் மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திமுகவினரை மிகக் கடுமையாக தாக்கினார். மேலும் சேது சமுத்திர திட்டத்தில் திமுக ஊழல் செய்துள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பாஜக பொதுக் கூட்டத்துக்குள் புகுந்தனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்தனர்.
இதையடுத்து ரோட்டில் கிடந்த கற்களை எடுத்து பொதுக் கூட்ட மேடையை நோக்கி எறிந்தனர். இதில் மேடையில் கட்டப்பட்டிருந்த ட்யூப் லைட்டுகள் உடைந்து சிதறின.
எச்.ராஜா பாதியிலேயே பேச்சை முடித்துக் கொண்டு மேடையின் பின் புறமாக குதித்து தப்பி காரில் ஏறிப் பறந்தார். இதையடுத்து அங்கிருந்த பாஜகவினரை திமுக தொண்டர்கள் தாக்க முயன்றனர். போலீசார் தலையிட்டு அதைத் தடுத்தனர்.
இச் சம்பவத்தால் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்ற பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications