ஜெயலலிதாவால் மூன்றாவது அணி படும்பாடு
டெல்லி:
டெல்லியில் நேற்று நடக்கவிருந்த மூன்றாவது அணியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தெலுங்கு தேசம் தலைவர் நாயுடு, சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் முன்னின்று இந்தக் கூட்டணியை ஆரம்பித்தனர்.
ஆனால், ஜெயலலிதா வழக்கம்போல் தனது வேலையைக் காட்டினார்.
இந்தக் கூட்டணியில் இருந்து கொண்டே பாஜகவுடன் ரகசியமாய் கைகோர்த்தார். பாஜகவுக்கு ஆதரவான முடிவுகளை எடுத்த அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு தனது அணியின் சார்பில் வேடாபாளரை அறிவித்துவிட்டு பாஜக வேட்பாளருக்கு அதிமுக எம்பி, எம்எல்ஏக்களை வாக்களிக்க வைத்தார்.
கேட்டால் தனக்கே தெரியாமல் அதிமுகவினர் பாஜகவுக்கு ஓட்டு போட்டுவிட்டதாக காதில் ஓட்டை போட்டார்.
இதையடுத்து நாயுடு, முலாயம் மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே முட்டல் மோதல்கள் உருவாயின.
இதனால் மூன்றாவது அணி உருவான வேகத்திலேயே கலகலகத்துப் போனது. ஜெயலலிதாவிடம் ஏற்கனவே மூக்கறுபட்ட காங்கிரசும், பாஜகவும் மூன்றாவது அணித் தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலையை பார்த்து சிரிக்கும் நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் இந்த கலகல அணியின் கூட்டம் நேற்று டெல்லியில் நடப்பதாக இருந்தது. ஆனால், ஜெயலலிதா டெல்லிக்கு போகவில்லை. இந் நிலையில் கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதிலாவது பங்கேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஹரியாணாவின் மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயலலிதா செய்த குழப்பத்தால் இந்தக் கூட்டணிக்கு நிர்வாகிகள் கூட இன்னும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுடன் ரகசிய கூட்டு வைத்துள்ள ஜெயலலிதா இந்தக் கூட்டணியின் அமைப்பாளர் பதவியை கேட்டு வருகிறார். ஆனால், ஜெயலலிதாவை நம்பி அந்தப் பொறுப்பைத் தர பிற தலைவர்கள் விரும்பவில்லை.
கூட்டணிக்கு தலைவராக இருந்து கொண்டு, மக்களவைத் தேர்தல் நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி என்று கூட ஜெயலலிதா அறிவிப்பார் என்பதாலும், அவர் எப்போது என்ன செய்வார் என்று யாராலும் யூகிக்க முடியாது என்பதாலும் ஜெயலலிதாவை நம்ப மற்ற தலைவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் தயாராக இல்லை.
இதனால் கூட்டணியின் அமைப்பாளர் பதவி ஜெயலலிதாவுக்கு கிடைப்பது பெரும் சந்தேகமே. இதனால் தான் கூட்டணியின் முக்கிய கூட்டங்களை ஜெயலலிதா புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications